Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

07 February 2012

ரஜினிக்கு சாரு வகுப்பெடுத்தால் சாருவுக்கு வாசகர் சுளுக்கெடுக்கிறார்


ரஜினிக்கு அறிவுரை கூறும் சாருவுக்கு, எவனையாவது அடிக்க வேண்டும் என்பதற்காகக்கூட ’அடித்து’ விடுவதை எப்போதுதான் விடப்போகிறார்களோ நம் எழுத்தாளர்கள் என்று வாசகரிடமிருந்து வருத்தமொன்று வந்திருக்கிறது. ஊரறிய அதை சாருவுக்கு அனுப்பி வைப்பது நம் தலையாய கடமையல்லவா?

04 February 2012

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...

இலக்கிய எழுத்தாளர் ’கேளிக்கை சினிமா’ நடிகர் என இரண்டு பேர் ஒரு விழாவில் இரண்டு கதைகளைச் சொல்கிறார்கள். இரண்டுமே அவர்கள் படித்த (அல்லது கேள்விப்பட்ட) கதைகள் எனும்போது நம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

03 February 2012

ரஜினி அவர்களுக்குப் பாராட்டு விழா

கலைஞர்கள் உணர்ச்சிகரமானவர்கள் என்பதுதான் உலகம் முழுமையும் நம்பும் பொதுக் கருத்து. ஆனால் உலகத்தரம் வாய்ந்த இலக்கிய சாதனைகளைப் பாராட்டுவதைவிடவும் ஒருபடி மேலே போய், உச்ச நட்சத்திரத்தைப் உச்சி குளிரப் புகழ, உலக இலக்கிய வாசிப்பை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் உணர்த்தியது இந்த விழாவின் இன்னொரு சிறப்பு.

25 January 2012

எஸ்.ராவுக்கெதிரான அவதூறுக்கெதிராகக் கண்டணம்

இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தம் பெயரில் வெளியிட்டிருப்பவர் என்கிற பெருமைக்கு உரியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அறந்தை நாராயணன் வாரந்தோறும் வயதாகிறது என்று நடிகையைப் பற்றி எழுதியதைப்போல வாரந்தோறும் விருதாகிறது என்பதையே தம் வாழ்நாள் இலக்கிய சாதனையாக வாழ்ந்துகொண்டிருப்பவர். அவரது இலக்கிய சாதனையைப் பாராட்ட ரஜினியும் வைரமுத்துவுமே வாயில்தேடி வருமளவுக்கு மதிப்பு மரியாதையுடன் இலக்கியமாய் வாழும் ஒருவரைப்போய் அவதூறு செய்யலாமா? அப்படி செய்யப்படும் அவதூறை இலக்கிய உலகம் கண்டிக்காமல் விடலாமா? ஊர்பேர் தெரியாத ஒருவர் கிசுகிசு பாணியில் அவதூறு செய்தால் அதை பார்த்துக்கொண்டு எழுத்தாளர்கள் தமிழில் எழுதும் பாவத்திற்காக சும்மா இருக்க வேண்டுமா?