Showing posts with label ஜெயகாந்தன். Show all posts
Showing posts with label ஜெயகாந்தன். Show all posts

25 June 2023

இப்பதான்னு இல்ல. எப்பவுமே இப்படித்தான்

எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் 

- ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983)

 

தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றிகுறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிறுமுனகல் தொடங்கிவிரை ஏறிக்கொள்ளும் அளவிற்கு எல்லோரும்அவரவர் இயல்பிற்கேற்ப சத்தம் போடுகிறார்கள்சிறுபத்திரிகை வளாகத்திற்குள். 

14 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 54 சுயநலம்

இரண்டு நாள் முன்பாக கேவிஆரைப் பார்த்ததும் முதல் காரியமாக, "எஸ்விஆருக்கு பணம் கொடுத்துவிட்டீர்கள்தானே" என்றுதான் கேட்டான். 

03 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 48 உயரம்

'ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கீங்களா ஜேகே' என்று கேட்டதற்கு, 'ஜவுளிக்கடை எப்படி நல்லா போகுதா' என்று ஜெயகாந்தன் நக்கலாகத் திருப்பிக் கேட்டதிலிருந்து, 'அவங்க கடைல தீபாவளிக்குத் துணி எடுத்திருக்கோம். ஆனா கட ஓனர், இவ்ளோ பெரிய எழுத்தாளர்னு தெரியாது' என்று, ஞாநி வீட்டில் பிரசாதம் தொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு சொன்ன அந்தப் பக்கத்துக்காரனான பாலா சிங் வரை, பலர் மூலமாகவும் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி ஜவுளிக்கடை வைத்திருப்பவர் என்பது தெரியவந்திருந்தது. கடைப் பெயரைக்கூட கேள்விப்பட்டது போலத்தான் இருந்தது. ஆனால் சரியாகத் தெரியவில்லை. நாகர்கோவிலிலேயே அதுதான் பெரிய ஜவுளிக்கடை என்று சமயவேலோ திலீப்போ யாரோ சொல்லி நினைவில் பதிந்திருந்தது. 

29 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 43 அசாதாரண அசடு

ஜானகிராமன் எல்லாம் வேலை பார்த்து ஓய்வுபெற்ற பின்பும் எழுதிக்கொண்டுதானே இருந்தார். அவரை விட எழுத்தில் சாதித்தவர் என்று எவ்வளவு பேரைச் சொல்லிவிடமுடியும் என்றும் ஒருபுறம் தோன்றிற்று. ஆபீசில் வேலைபார்த்துக்கொண்டே எழுதுகிறார் என்பதால்,ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் என்று தி.ஜாவை கிண்டலடித்த, முழுநேர லெளட்ஸ்பீக்கரான ஜெயகாந்தனைவிட கலாரீதியாக ஜானகிராமன் சாதித்தது ஒப்பிடமுடியாத உயரமல்லவா.

09 March 2023

அயோத்தி படமும் அயோக்கியத்தனமும்


அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…

 “உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும்ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள்.  உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான்   31.8.2011 காலை மணிவாக்கில்பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல்.  அவர்,  எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள்  சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும்,  சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம். 

05 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 32 கை

சின்ன வயசுல ஜெயகாந்தன் வீட்டை விட்டு வெளில வந்தார்னா, அவரா வரல. அவரால இருக்கமுடியலை. இருக்கமுடியாதபடி ஒரு பலமான கை அவரை வெளிய பிடிச்சுத் தள்ளிச்சு. அப்படியான நிர்பந்தம் உங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்க. நீங்க பாட்டுக்கும் கெளம்பி வந்திருக்கீங்க. டூர் போகறா மாதிரி வந்திருக்கீங்க அவ்வளவுதான். வந்தா மாதிரியே திரும்பிப் போனாலும் ஒண்ணும் ஆகிடாது...

14 January 2017

அடத் தேவாங்கே

யாரோ பிச்சைக்காரன் திரித்துச் சொன்னதை, துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியதாக யாரோ மெய்ல் தட்டினால் அதற்கு, வங்கிப் பெண்மணி வீடியோ போல ஆப் பாயிலாகக் கொதித்து இன்னொரு ’தேவாங்குக் குதி’ குதித்திருக்கிறார் ஜெயமோகன். 

28 February 2015

பாரதி மணியும் பரமார்த்த எலிகளும்

பாரதி மணியிடம் நலம் விசாரித்து இன்று நிறைய அழைப்புகளாம். வழக்கமான எள்ளலுடன் அதைப் பதிவாகப் போட்டிருக்கிறார் https://www.facebook.com/bharati.mani/posts/10203742830880401 அதற்கு 120 லைக்குகள், வாழ்த்தும் நையாண்டியுமாய் 55 கமெண்டுகள். அவற்றுள் படு நக்கலாய் ஐந்தாறு கமெண்ட்டுகளுக்கு உபயதாரர் பாரதி மணியே. 

28 January 2014

உத்தம புத்திரன் பார்ட் - 3

புத்தகத்தில் இருக்கும் 30 கதைகளும் ஒட்டுமொத்தமாய் PDFஆக வெளியிடப்பட்டதால், பதிப்பாளரால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, 16.01.2014 அன்று, மனுஷ்ய புத்திரனிடமிருந்து, மீட்டெடுக்கப்பட்ட விமலாதித்த மாமல்லன் கதைகள், 2014 புத்தகக் கண்காட்சியில் விற்பனையான விபரம் கடைவாரியாகப் பின்வருமாறு:

06 November 2013

கொம்பு

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், உலகம் அறியாமல், இலக்கியவாதிகளின் அசட்டைச் சிரிப்புக்கு ஆளாகி, விடுதலைக்குள் முடங்கி கிடந்தது பல்லாண்டு காலம். 

03 March 2011

பைத்தியக்காரன் சிவராமா நீ ஒரு பச்சோந்தி! ஏன்?

பொதுவெளிக்குக் கெட்டவார்த்தையுடன் போகக் கூடாது. என்கிற புனித மவன் பைத்தியக்காரன் சிவராமனுக்கு!

ஆடை உடுத்திய நீலப்படங்கள் என்கிற தலைப்பில் குங்குமத்தில் எழுதிய பத்தியில் அலைகள் ஓய்வதில்லை படம்பற்றி...

வயதுக்கு வராதவர்கள் பண்ணுவதும் அதை வயதுக்கு வந்தவர்கள் பார்ப்பதும்...தூ!

20 February 2011

வான்கா - ஆண்டன் செகாவ்

இந்தக் கதை 1886ல் தமது 26ஆம் வயதில் செகாவால் எழுதப்பட்டது. தமிழின் அந்தக் கால எழுத்தாளர்கள் பலருக்கும் குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்த கதைகள் செகாவுடையவை. இவற்றின் வாசிப்பில் மெய்மறந்து சாயல் செய்து மனிதாபிமான முற்போக்கு இலக்கியம் படைப்பதாய் பெருமை கொண்டவர்களும் உண்டு.