Showing posts with label சுரா. Show all posts
Showing posts with label சுரா. Show all posts

08 November 2017

தவிப்பு - சிறுகதைத் தொகுதி

1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில்  64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது. 

01 December 2012

வாழும்போதே கிடைத்த நினைவுகூறல்

இலக்கிய நண்பர்கள் - விமலாதித்த மாமல்லன்

ந.முருகேசபாண்டியன்

23 February 2012

ஆனந்த்! உங்கள் தேசம் மலாவி இல்லைதானே?

On Wed, Feb 22, 2012 at 8:30 PM, Anandh Kumar <***@gmail.com> wrote:

அன்புள்ள மாமல்லன்,

'சிறுமி கொண்டுவந்த மலரி' லிருந்து உங்கள் எழுத்துக்களை தீவிரம்மாக படித்து வருகிறேன் (இதுவரை வலைப்பக்கத்தில்தான்) நேற்று தங்கள் வலைப்பதிவில், 'ரோஸ் மில்க்' படிக்க நேர்ந்தது. அருமையான விவரிப்பு. ஆனால் கடைசியில் ஒரு சிறு குழப்பம். நான் அந்த காட்சிக்குள்ளேயே இருந்ததால் அந்த இல்லாத வரி சரியான நேரத்தில் என்னை கொஞ்சம் அந்நியாமாக்கிவிட்டது. 

04 June 2011

இப்படி ஒருவர் இருந்தார் - எல்லாமாக

(கடிதத்தின்) நகல்

அன்பான ராமசாமி,
13.06.86

தங்களுக்குக் க்டிதம் எழுதி அநேகமாக ஒரு மாதம் ஆகிறது என நினைக்கிறேன். இந்த ஒரு மாதத்தில்தான் எத்தனை ஏற்ற இறக்கங்கள் எனக்குள்.

02 June 2011

சுரா 80

jyovram ஜ்யோவ்ராம் சுந்தர் 
சுரா 80 விழா நிகழ்ச்சிக்கு நம் @maamallan சாரைக் கூப்பிடவில்லையா? எகொஇ!

maamallan விமலாதித்த மாமல்லன் 

@jyovram அமைப்புசாரா சுரா வழிபாட்டு அமைப்பு. எங்களுக்குக் கிளைகள் வேறு எங்கும் இல்லை - மனதைத்தவிர.