Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts
Showing posts with label சுந்தர ராமசாமி. Show all posts

28 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 56 அவரவர் உலகம்

ராமசாமியைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து, மன விரிவே சிந்தனையை விரிக்கும். சுயசிந்தனையே பிரத்தியேகப் பார்வையைக் கொடுக்கும். தனித்துவப் பார்வையே ஆளுமையை உருவாக்கும். அதிலும் இருக்கிற சட்டகத்திற்குள் அடங்காத ஆளுமையாக உருவெடுக்க எதிரெதிர் கருத்துகளுக்கு முகம் கொடுத்து எழுந்து வரவேண்டும் என்று என்னென்னவோ எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருந்தன

25 June 2023

இப்பதான்னு இல்ல. எப்பவுமே இப்படித்தான்

எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் 

- ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983)

 

தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றிகுறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிறுமுனகல் தொடங்கிவிரை ஏறிக்கொள்ளும் அளவிற்கு எல்லோரும்அவரவர் இயல்பிற்கேற்ப சத்தம் போடுகிறார்கள்சிறுபத்திரிகை வளாகத்திற்குள். 

07 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 53 மிதப்பு

தம்முடைய இயல்பான கட்டுக்கோப்பை உதறிவிட்டு, அவரையும் அறியாமல் முகத்தில் வெளிப்படையாய் மகிழ்ச்சிப் பொங்க, சற்றே உரக்கப் பேசிக்கொண்டு இருந்தார். அறைக்கு வந்த கமலா மாமியிடம், 'தெரியுமா, இவர் நகுலனைப் பாக்க திருவணந்தபுரம் போகலையாம்.  கன்யாகுமரியைக் கூட பாக்காம, மெட்ராஸுக்குத் திரும்பிப்போறார்' என்று குதூகலத்துடன் குழந்தைபோலச் சொல்லிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி

01 June 2023

ஆபீஸ் அத்தியாயம் 52 போதும்

“ஜெனரலா நெறைய ரைட்டர்சுக்கு அப்பாக்களோட ஒத்துப் போகாது. பொதுவா, அப்பாக்கள் நாம்ப நினைக்கறா மாதிரி பிள்ளைகள் இருக்கணும், அதுதான் அவங்களுக்கு நல்லதுனு நினைப்பாங்க. பசங்க - அதுலையும் கொஞ்சம் யோசிக்கற பசங்க, அவங்க எப்படி இருக்கணுங்கறதைப் பத்தி சொந்தமா நெறைய யோசிச்சு வெச்சிருப்பாங்க. அது அப்பாக்களோட நெனப்புக்கு நேர் எதிரா இருக்கும். தமிழ்ல ஆரம்பிச்சு உலக இலக்கியம் வரைக்கும் ஆகாத அப்பா மகன்களுக்கு  ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்” என்று குறுமுறுவலுடன் முடித்தார். 

17 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 50 நிறைவு

சிரித்தபடி, 'நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்' என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. 

உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான்.  

அவனை உட்காரச் சொல்லிவிட்டு, 'ஒரு நிமிஷம்என்றபடி கடையின் காரியதரிசி காட்டிய கணக்கைப் பார்ப்பதில் மூழ்கிப்போனார். 

13 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 49 முடிச்சுகள்

போய்க்கொண்டிருக்கிற சம்பாஷணையைச் சிறிய இடைவெளிக்குப் பின் தொடர்வதைப்போல, 'சொல்லுங்க' என்று எதிரில் வந்து அமர்ந்தார் சுந்தர ராமசாமி. 

03 May 2023

ஆபீஸ் அத்தியாயம் 48 உயரம்

'ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கீங்களா ஜேகே' என்று கேட்டதற்கு, 'ஜவுளிக்கடை எப்படி நல்லா போகுதா' என்று ஜெயகாந்தன் நக்கலாகத் திருப்பிக் கேட்டதிலிருந்து, 'அவங்க கடைல தீபாவளிக்குத் துணி எடுத்திருக்கோம். ஆனா கட ஓனர், இவ்ளோ பெரிய எழுத்தாளர்னு தெரியாது' என்று, ஞாநி வீட்டில் பிரசாதம் தொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு சொன்ன அந்தப் பக்கத்துக்காரனான பாலா சிங் வரை, பலர் மூலமாகவும் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி ஜவுளிக்கடை வைத்திருப்பவர் என்பது தெரியவந்திருந்தது. கடைப் பெயரைக்கூட கேள்விப்பட்டது போலத்தான் இருந்தது. ஆனால் சரியாகத் தெரியவில்லை. நாகர்கோவிலிலேயே அதுதான் பெரிய ஜவுளிக்கடை என்று சமயவேலோ திலீப்போ யாரோ சொல்லி நினைவில் பதிந்திருந்தது. 

01 March 2023

உலகச் சிறுகதைகள் 11 கெய்ட் ஷோப்பின்

வரப்போகும் அந்த வருடங்களில் அவள் யாருக்காகவும் வாழ வேண்டியதில்லை; தனக்காகவே அவள் வாழப்போகிறாள். கண்மூடித்தனமான வற்புறுத்தலால் அவளுடைய விருப்பத்தை வளைத்துவிடும் சக்திவாய்ந்த ஆசைகொண்ட வேறொரு மனம் இருக்கப் போவதில்லை; சக உயிரினத்தின்மீது தன்னுடைய தனிப்பட்ட ஆசையைச் சுமத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று ஆண்களும் பெண்களும் நம்புவதற்குக் காரணமாக இருப்பது அந்த வற்புறுத்தல்தான். அந்தச் செயலின் நோக்கம் அன்பு நிறைந்ததா, குரூரமானதா என்பது ஒரு பொருட்டில்லாமல் நிச்சயம் அது ஒரு குற்றமே என்பதை அந்தக் குறுகிய கணத்தில் உண்டான ஞான வெளிச்சத்தில் அவளால் பார்க்கமுடிந்தது.

24 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 11 இருந்து செஞ்சிட்டுப் போ

மெதுவடை கேட்டான். மசால்வடை வந்தது. எலி கதையில் அமி விவரித்திருப்பதைப் போலவே அச்சு அசலாக இருந்தது. அந்தக் கதையை அவர் எழுதியே பத்து வருடங்களிருக்கும். மசால் வடை எப்போதும் போலதான் இருந்துகொண்டு இருக்கிறது.

08 February 2023

சார்ந்தும் சாராமலும்

"மாமல்லன் எழுதும் ஆபீஸ் நாவல் தொடர் மெட்ராஸ் பேப்பரில் யாரும் படிக்கிறீங்களா"

சில நாட்களுக்குமுன், காலையில் இப்படியொரு செய்தி வந்தது வாட்ஸப்பில். 

06 November 2021

புனைவு என்னும் புதிர்

புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி

தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது.


அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்வ் 


கிண்டிலில் வாங்க: புனைவு என்னும் புதிர்


10 September 2015

தும்பிக்கையான் தாள்பணிந்து நம்பிக்கையோடிரு

க்ரியால ஷோபா சக்தியோட புக்கு போட ராமகிருஷ்ணன் ஆசைப்படறார் போல இருக்கே 

20 August 2015

எடிட்டர் சுஜாதா என் கதையை எடிட் பண்ண முயற்சித்த கதை

1989ல் நிழல் கதையை எழுதி நீளமாகப் போய்விட்ட அதைப் பிரசுரிக்கச் சிறு பத்திரிகை எதுவுமின்றிச் சும்மா கிடந்தது. 90-91ல் சுந்தர ராமசாமி காலச்சுவடு சிறப்பிதழ் கொண்டுவருவதாகக் கூறிக் கதை கேட்டார். அதை அனுப்பி வைத்தேன்.

27 December 2014

சாதனை

@writerpara: @maamallan /துண்ட கட்டிக்கிட்டு குளிக்கப் போறமாதிரி / சாகும்வரை மறக்கமாட்டேன். குட்நைட்.

04 February 2014

குறும்படமும் பெருங்கொலையும்

சினிமாவை ஆராதிக்கும் மிகுந்த நுண்ணுணர்வுடைய கலைஞர் என்கிற தம்மைப் பற்றிய பிம்பத்தை கவனமாக முன்னிலைப்படுத்துவதில் முதன்மையான சினிமாக்காரர் பாலுமகேந்திரா. அவருக்கு அந்த பிம்பத்தை அளிப்பதைத் தமிழகத்தின் பெரும்பான்மையும் தனக்குச் செய்துகொள்ளும் கெளரவமாகக் கருதுகிறது. அல்லது மேடைக்கு மேடை நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி சினிமாக்காரர்கள் அவரை வாணளாவப் புகழ்ந்து அப்படிக் கருதும்படியாக தூண்டுகிறார்கள். இணைய அறிவுஜீவி லார்வாக்களின் மூர்க்கக் கொண்டாட்டக் கூவலில் காது ஜவ்வு கிழியாத குறை.

06 November 2013

கொம்பு

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், உலகம் அறியாமல், இலக்கியவாதிகளின் அசட்டைச் சிரிப்புக்கு ஆளாகி, விடுதலைக்குள் முடங்கி கிடந்தது பல்லாண்டு காலம். 

05 December 2012

இவை புத்தகமாய் வந்தால் புழல் விருது கிடைக்குமோ?

Tuesday, November 13, 2012 தீபாவளியன்று ரிலீஸான பிராமணர்களா வாமனர்களா வுக்கு இரண்டே நாட்களில் Thursday, November 15, 2012 அன்றே