Showing posts with label எஸ்.ரா. Show all posts
Showing posts with label எஸ்.ரா. Show all posts

08 November 2017

தவிப்பு - சிறுகதைத் தொகுதி

1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில்  64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது. 

25 August 2013

வெம்பினால் வெம்புங்கள் 2

//முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.// - தி.க. வீரமணி

30 June 2013

பாலாவின் பரதேசி a film by எஸ்.ரா

இணையத்தை வெட்டியாய் மேய்ந்துகொண்டிருக்கையில் எஸ்.ராவின் முத்துநவ ரத்தினமொன்று கிடைத்தது http://www.facebook.com/Geethappriyan/posts/10151770833486340

26 February 2012

யாகாவராயினும் புக்காக்க

ஆன்லைன் விளையாட்டுக்களை ஆடிக்கொண்டிருந்த எதிர் வீட்டுக் குட்டிப்பையன் திடீரென காண்ட்-கண்ட், தெர்தா-சர்தா, ஃபூக்கோ-பூக்கோ என தொடர்ந்து கத்தத்தொடங்கிவிட்டான். அந்த வீட்டுக்காரர்கள் என்னமோ ஏதோ என அரண்டுபோயினர். குடும்ப கெளரவத்துக்கு பங்கம் வந்துவிடாத வண்ணம், கமுக்கமாய் அம்மன் கோவில் பூசாரி முதல் 24மணிநேர கிளினிக்கின் ஈயோட்டி மருத்துவர் வரை எல்லோரையும் முயற்சித்துப் பார்த்தனர். ஏது செய்தும் அவன் கத்தலை நிறுத்த முடியாமல் போகவே, இதுபோன்ற கிறுக்கிருக்கும் வீடு என நினைத்தனரோ என்னவோ தம் கவலையை மெல்ல என் மனைவியிடம் பகிர்ந்துகொண்டனர். 

05 February 2012

எஸ்.ராவும் தமிழ் நண்டுகளும்

எழுத்தாளரும் இல்லை சினிமாவில நுழைய முயற்சித்துத் தோற்றவரா என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் வாசகரும் பதிவருமான கோபிக்கு ஏனைய்யா எஸ்.ரா மேல் இத்தனை வயிற்றெரிச்சல்?

04 February 2012

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...

இலக்கிய எழுத்தாளர் ’கேளிக்கை சினிமா’ நடிகர் என இரண்டு பேர் ஒரு விழாவில் இரண்டு கதைகளைச் சொல்கிறார்கள். இரண்டுமே அவர்கள் படித்த (அல்லது கேள்விப்பட்ட) கதைகள் எனும்போது நம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

01 February 2012

எஸ்.ரா! ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி டி


Gan ny ***@gmail.com
2:47 PM (3 hours ago)
to me



என்னுடைய படைப்புலகம் பற்றி ஆய்வு செய்து மூன்று தமிழ் ஆய்வாளர்கள் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். பதினோறு பேர் எம்.பில் பட்டம் பெற்றிருக்கிறார்கள். நான்கு கல்லுரிகளிலும் இரண்டு பல்கலைகழங்களிலும் என்னுடைய படைப்புகள் பாடமாக வைக்கபட்டிருக்கின்றன.

31 January 2012

பேராசிரியர் எஸ்.ரா

இடிச்ச புளியாய் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொல்லாமல் இருக்கும்வரை இவரும் புத்திசாலிதானோ என்று தோன்றும். அதுவும் பளபளக்கும் முன்மண்டை வாய்க்கப்பட்டால் படித்தே முடிகொட்டிப் போனத்ற்கு சாட்சியமாய் அசப்பில் பேரறிஞர் பெர்னார்ட் ஷாவோ என்றுகூடத் தோன்றும். இது போதாதென்று மைக்கையும் பிடித்து சப்ளாக்கட்டையும் இல்லாமல் இலக்கிய உபன்யாசம் வேறு கொடுத்தால் கேட்கவே வேண்டாம் ஆழ நீள அகலத்தில் அசல் இலக்கியவாதி இவர்தான் என்று தோன்றிவிடுவதில் என்ன ஆச்சரியம்.

25 January 2012

எஸ்.ராவுக்கெதிரான அவதூறுக்கெதிராகக் கண்டணம்

இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தம் பெயரில் வெளியிட்டிருப்பவர் என்கிற பெருமைக்கு உரியவர் எஸ்.ராமகிருஷ்ணன். அறந்தை நாராயணன் வாரந்தோறும் வயதாகிறது என்று நடிகையைப் பற்றி எழுதியதைப்போல வாரந்தோறும் விருதாகிறது என்பதையே தம் வாழ்நாள் இலக்கிய சாதனையாக வாழ்ந்துகொண்டிருப்பவர். அவரது இலக்கிய சாதனையைப் பாராட்ட ரஜினியும் வைரமுத்துவுமே வாயில்தேடி வருமளவுக்கு மதிப்பு மரியாதையுடன் இலக்கியமாய் வாழும் ஒருவரைப்போய் அவதூறு செய்யலாமா? அப்படி செய்யப்படும் அவதூறை இலக்கிய உலகம் கண்டிக்காமல் விடலாமா? ஊர்பேர் தெரியாத ஒருவர் கிசுகிசு பாணியில் அவதூறு செய்தால் அதை பார்த்துக்கொண்டு எழுத்தாளர்கள் தமிழில் எழுதும் பாவத்திற்காக சும்மா இருக்க வேண்டுமா? 

09 October 2011

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் எஸ்.ரா ஓட்டிய கடைசி ரீல்

கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் சிரிப்பு மூட்டும் சிறந்த நகைச்சுவை எழுத்தாளரான விருது ஸ்பெஷலிஸ்ட் திருவாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒலக சினிமா புத்தகத்தில் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் முடிவு பற்றி எழுதி இருப்பதை கூகுள் பஸ்ஸில் படிக்க நேர்ந்ததும் வெடித்து சிரித்துவிட்டேன். 

14 July 2011

ஒரு வேளை...

ஒரு வேளை, பேயோன் என்கிற பெயரில் எழுதுபவர் உண்மையில் எஸ்.ராவாகக்கூட இருக்கலாமோ?

விசேஷ காரணம் ஏதுமில்லை,இதைப்படிக்கத் தொடங்கியதால் வந்த சொந்தேகம்.





12 July 2011

விருது மானத்தைக் காப்பாற்றுமா?

அடிப்படைத் தமிழே தெரியாமல், பிறந்ததே புத்தகம் வாசித்தபடி என்பது போல் போஸ் கொடுத்து மொக்கைகளிடம் இலக்கிய விருதுகள் அள்ள வேண்டுமா - இன்றே சேருவீர் எஸ்.ரா டுடோரியல்.

05 April 2011

தகவல் களேபரங்களும் தற்காலத் தமிழ் ஆளுமைகளும்

jorge luis borges
On Mon, Apr 4, 2011 at 2:49 PM, ............wrote:
Dear Sir,
From the link provided in your blog i read Charu's post where he mentions Borges' story ' Approach to Al Mutasim' . In Borges story the only mention of Trichinopolis occurs when the protagonist tells about the disappearance of the two cigarettes made in Trichinopolis along with a few silver coins because of the thief. However Charu writes that Borges has talked about the Muslim abundance in Trichi and a muslim searching for stone after urination.
May  be he has forgotten the story which  he might have read long back.
yours,
.............

தங்கள் மின்னஞ்சலையும் தங்கள் பெயரையும் இருட்டடிப்பு செய்தமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது அந்த எழுத்தாளரின் தற்கொலைப்படையினரிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டியே செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை. மற்றபடிக்குத் தாங்கள் சம்மதித்தால் இரண்டையும் திறந்து விடுவ்தில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.