Showing posts with label உயிர்மை. Show all posts
Showing posts with label உயிர்மை. Show all posts

18 February 2023

தவிப்பு சிறுகதைத் தொகுப்பு

மார்ச் 2015 முதல் ஜூன் 2016 வரை எழுதிய 9 சிறுகதைகளின் தொகுப்பே தவிப்பு.

06 November 2021

தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)

மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச் சிறுகதைகள், இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். 

இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை ஆனந்தவிகடன் உயிர்மை ஆகிய பத்திரிகைகள், ’பிரச்சனை பண்ணுவார்கள்’ என்று வெளியிடத் தயங்கின. வெளியிடும் அளவுக்குத் தரம் இல்லை என்று காலச்சுவடு நிராகரித்தது. 

பத்திரிகைகளும் சூழலும் எப்படியான முற்போக்கு / பிற்போக்குக் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கின்றன என்பதற்கான சாட்சியம் இது. 

அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்

கிண்டிலில் வாங்க: தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)

04 December 2017

எதோ என்னாலானது

1980முதல் 1994வரை எழுதி வெளியான 30 கதைகளை 4 புத்தகங்களாகவும் 2010ல் உயிர்மை வெளியிட்ட முழுத் தொகுப்பையும் நானே வெளியிட்ட சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரலையும் அமேஸானில் 6 eBookகுகளாக 24.10.17 முதல் வெளியிடத்தொடங்கினேன். அவற்றில் இதுவரை 54 பிரதிகள்  விற்றிருக்கின்றன. 5702 பக்கங்கள் படிக்கப்பட்டுள்ளன.  இன்று வெளியான சின்மயி விவகாரம் மட்டுமே 424 பக்கங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன. 

08 November 2017

தவிப்பு - சிறுகதைத் தொகுதி

1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில்  64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது. 

13 February 2014

முதல் போட்டு ராயல்டி எடுத்த முதல் எழுத்தாளன்

விமலாதித்த மாமல்லன் கதைகள் 145 பிரதிகளுக்கான ₹18270 காசோலை காலச்சுவடில் ரெடி. இப்போது நான் வேலை மீதிருப்பதோ மீஞ்சூருக்கு சற்று முன்னால் # (12/02/2014)

நூலகங்களுக்காக புத்தகங்களை வாங்கிய சிங்கப்பூர் மணி வேலனுக்கு நன்றி. இப்போதேனும் நான் அளித்த செக்கை வங்கியில் செலுத்தி என் மீதிருக்கும் அடுத்தவர் பணத்தை வைத்திருக்கும் தார்மீக சுமையிலிருந்து என்னை விடுவிக்கும்படி மனுஷ்ய புத்திரனை வேண்டிக்கொள்கிறேன் 

04 February 2012

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...

இலக்கிய எழுத்தாளர் ’கேளிக்கை சினிமா’ நடிகர் என இரண்டு பேர் ஒரு விழாவில் இரண்டு கதைகளைச் சொல்கிறார்கள். இரண்டுமே அவர்கள் படித்த (அல்லது கேள்விப்பட்ட) கதைகள் எனும்போது நம் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்?

25 December 2010

உயிர்மையும் வினவும் சிரிப்பானும்

இருக்கவே இருக்கு


புரட்சிகர நூல்களை 

வெளியிடும் பிரமுகர்கள் யார்?


ஒருவர் நீரா ராடியாவின் சென்னைத் தோழியின் நெடுநாளைய நண்பர்

மற்றவர் செம்மொழி மாநாட்டின் கவின் முகப்புகளை அமைத்த கலைஞர்



இதிலென்ன பிரச்சனை


ஒரு பிரச்சனையும் இல்லை

இதனால் இவர்களின் அறிவும் கலையும் 

இம்மியும் குறைந்துவிடவில்லை



தத்துவம் கொள்கை 

தனிமனித உறவு

அனைத்தும் தனித்தனி
என்பதறியா புரட்சிக் குருடில்லை