Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

21 February 2024

சாரி டமில் மதர்

இவர், இவரது காமர்ஸ் ஆசிரியரால் 'படிக்கிற, வாசிப்பில் ஆர்வமுள்ள பெண்' என 'விளக்கும் வெளிச்சமும்' நூலின் இலவசப் பிரதியை அனுப்பும்படி பரிந்துரைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளில் ஒருவர். பிகாம் முதல் ஆண்டு. (17 வயது இருக்குமா) 

01 April 2023

கதாபாத்திரம் கட்டிய சந்தா

இன்னும் சில வாரங்கள் கழித்து வரவிருக்கிற பாத்திரம், ஆபீஸ் நாவலுக்கு ஆண்டு சந்தா கட்டியிருக்கிறது 

03 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 28 வேட்கையும் பிரசாதமும்

அதுவரை, 'விட்டுவிட்டால் என்ன' என்கிற எண்ணமாக இருந்தது, மெல்ல விட்டுவிடுவது என்கிற முடிவாக அவனுக்குள் உறுதியாகத் திரளத்தொடங்கியிருந்தது. நான்கையும் யோசித்து முடிவு எடுப்பதாகத்தான் நாம் நம்புகிறோம். ஆனால் நம் மனமானது, நமக்கே தெரியாமல், சாதகமான காரணங்களையாகத் தேடித்தேடித் திரட்டி, எடுத்த முடிவை நியாயப்படுத்திக்கொள்ளவே பார்க்கிறது

02 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 24 எப்படி

இலக்கிய அபிப்ராயங்கள் எழுத்தாளர்கள் பற்றிய அக்கப்போர்கள் என – எவளாவது பணக்கார கெழவி கெடைச்சா சீக்கிரம் கட்டிக்கிட்டு செட்டில் ஆகிடணும்சிகரெட் பிடிக்க வசதியா இருக்குனு இண்ட்டலெக்சுவல் பொம்பளைங்க க்ரியாவுக்கு வந்துடறாங்க என்பதைப் போலவேலை பார்க்கிற இடத்தைக் கூட விட்டுவைக்காமல் எகத்தாளமாக பேசி எல்லாவற்றையும் அனாயாசமாக அணுகுகிறவராக இருந்த திலீப்குமார், க்ரியாவில் பில் போடுவது முதல் மேற்பார்வை பார்ப்பதுவரை எல்லாமுமாக இருந்தார்.

ஆபீஸ் அத்தியாயம் 23 வாழ்வது எப்படி

அம்மா எரிச்சலூட்டுபவளாகத் தொடங்கியதுஅவனுக்கு அறிவு பிடிபடத்தொடங்கியதிலிருந்து இருக்கலாம் என்று தோன்றியது. அறிவுக்கும் அவளுக்கும் எப்போதுமே சம்பந்தம் இருந்ததில்லை. அப்பாவுக்கு அவளிடம் வந்த எரிச்சலுக்குக் காரணம் கூட அவளது மடத்தனமாகத்தான் இருக்கவேண்டும் என்று, அவர் போன பிறகு அதிகமாகத் தோன்றத் தொடங்கிற்று. 

ஆபீஸ் அத்தியாயம் 22 கெளரவமாக வாழ்வது எப்படி

பரீக்‌ஷாவில் இருந்தது என்னவோ ஒன்றரை வருடம்தான் என்றாலும் சுற்றிலும் இலக்கியவாதிகளாக இருந்ததாலோ என்னவோஉள்ளே வரும்போதுமு. மேத்தா முற்போக்கு என கல்லூரி கவிதைப் போட்டிகளின் விட்டகுறை தொட்டகுறையாக ஊசலாடிக்கொண்டிருந்தவன்பரீக்‌ஷாவை விட்டு வெளியேறும்போது  தீவிர இலக்கியம் சினிமா என்று முழுவதுமாகத் தலைகுப்புறக் குதித்துவிட்டிருந்தான்.

ஆபீஸ் அத்தியாயம் 21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி?

அந்தப் பழக்கம் எப்போது ஆரம்பித்தது என்று அவனுக்கே சரியாகத் தெரியவில்லை. எழுத ஆரம்பித்ததில் இருந்துதான் இருக்கவேண்டும். 

மணல்வீடும் குண்டியடிக்கக் கூப்பிடும் கலையும்

 கடைசி பதிவு 

By சதீஷ் குமார் : 

July 31, 2019 

(சோத்துக்கே சுண்ணியை ஊம்புபவன் நான். உங்களுடன் சமர் செய்ய என்னாலாகாது)

 

இந்த பதிவோடு இந்த  பிரச்சினையை  முடித்துக்கொள்கிறேன்.

பதிவை நீக்கியவுடன் நான் பின்வாங்கியதாக  நண்பர்கள் சொன்னார்கள். அதுவும் சரிதான். பழைய பதிவை  சேர்த்தே  பதிவிட்டிருக்கிறேன்.

'இதை ஏன் பொதுவெளியில்  பேசுறஎன்றால்

"ஏன் பேசக்கூடாது" என்பதுதான் பதில்.

01 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 39 ஒரு நிமிஷம்

அவ்வளவு வெடிச்சத்தங்களுக்கிடையிலும் தீபாவளியன்று எட்டு மணிக்குதான் எழுந்தான். 

கிண்னத்தைக் கொண்டுவந்தாள் அம்மா. 

பல்தேச்சுட்டு அப்படியே தலைக்கு எண்ணெய் வெச்சுக் குளிச்சுடுடா என்றாள். 

பே. உனக்கு வேற வேலயே கிடையாது. எல்லாத்தையும் உன்னோட வெச்சுக்கோனு எத்தன தடவை சொல்றது என்று எரிந்துவிழுந்தான். 

குளித்துமுடித்து வந்தவன், பட்சணம் என்று கொடுத்ததை இரண்டு கடி கடித்துவிட்டுஉனக்குதான் சப்பாத்தியத் தவிர உருப்படியா ஒண்ணும் பண்ணவராதே ஏன் கஷ்டப்பட்டு காசைக் கரியாக்கி அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்தறே. 

26 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 19 மானக்கேடு

சிறுவயதிலிருந்தே எல்லாக் குழந்தைகளையும் போல அவனுக்கும் இனிப்பு பிடிக்கும். இனிப்பை அதிகமாகத் தின்பது உடம்புக்கு நல்லதில்லை என்று நினைக்கிற எந்த அப்பாவும் அதிகபட்சமாக பயமுறுத்தச் சொல்வது பல் சொத்தையாகிவிடும் என்பதாகத்தானே இருக்கும். அவனுடைய அப்பா, பொணத் தேவடியாள் மகனே இப்படியே சக்கரை தின்றுகொண்டே இருந்தால் ஹைதராபாத் மாமாவைப் போல ஒரு நாள் காலை எடுத்துவிடுவார்கள் பார்த்துக்கொண்டே இரு என்பார். மராட்டியில் தேவடியாள் மகனே என்பதோ தேவடியாளே என்பதோ நிறைய குடும்பங்களில் சகஜம். குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூட  ரள்ளேகா ராண்டேவை உபயோகிப்பது சர்வ சாதாரணம்

ஆபீஸ் அத்தியாயம் 18 புகை

அடுத்து வந்த நாட்கள், தினந்தோறும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் அங்கே எதுவுமே இல்லாமல் எப்போதும்போல இருட்டு மொட்டையாகத்தான் இருக்கப்போகிறது அவன் வீட்டு மொட்டைமாடி என்பதை உறுதிப்படுத்தின. 

ஆபீஸ் அத்தியாயம் 17 வீடும் பொருளும்

அது இலை. இது இல்லை என்று அவன் வாழ்க்கை பூராவும் ஒரே இல்லாத பாட்டம்தான். எல்லோருக்கும் தன்னால் வரக்கூடிய பேச்சே, அவனுக்கு மூன்று வயதுவரை வரவில்லை. ஆ ஊ என்று எல்லாவற்றுக்கும் சைகை பாஷைதான். காந்தா பாய் பாட்டி சோளிங்கர் நரசிம்மருக்கு மணி கட்டுவதாக வேண்டிக்கொண்டதற்குப் பிறகுதான், அவனுக்குப் பேச்சு வந்ததாகச் சொல்லுவாள் அம்மா. 

ஆபீஸ் அத்தியாயம் 16 அறையும் வீடும்

படிக்கட்டில் நின்றபடியே, கோவிலுக்குப் போய்ட்டு வீட்டுக்குப் போறேன் என்றாள்.


நீ எங்கையாவது போய்க்கோ. உன்னால எனக்கு இன்னைக்கு ஆபீஸுக்கு லேட்டாயிடுச்சி. அட்டெண்டன்ஸ் உள்ள போயிருக்கும் என்றபடி பெடலை அழுத்தி மிதித்தான்


பணம் பத்திரம்டா என்று அவள் சொன்னது எங்கிருந்தோ சொல்வதைப் போல் கேட்டது

 

0

25 February 2023

சுரணையின் மரணம்

 


சுரணையின் மரணம் என் 73ஆவது கிண்டில் புத்தகம்

இது, காலச்சுவடு பதிப்பகத்தில் புனைவு என்னும் புதிர் வெளிவந்தபோது ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றிப் பேசுகிற புத்தகம்.  

24 February 2023

ஆபீஸ் அத்தியாயம் 15 புளூபெல்

எழுத்தில் மட்டும் என்றில்லாமல் எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. தான் எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம்

ஆபீஸ் அத்தியாயம் 14 ஒரு சைக்கிளின் கதை

அப்பாவின் அஸ்திப் பானையை கடலில் தூக்கிப்போட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்தபோது, கூடவே வந்த மனிதர் குறிப்பிட்டது இந்த சொசைட்டியைத் தானோ. 

ஆபீஸ் அத்தியாயம் 13 விபரீதங்கள்

பத்துப் பன்னிரண்டு வருடங்கள் கழித்து பதிப்பக முன்னொட்டோடு அறியப்படவிருந்த வசந்தகுமார், வளைவும் நெளிவுமாக ஓவிய எழுத்துக்கள் போல கைப்பட எழுதிபைண்ட் செய்து, அட்டையில் கூட ஓவியம் வரைந்து, உச்சிவெயில் என்கிற குறுநாவலை உலகின் ஒற்றைப் பதிப்புப் புத்தகமாக அவனிடம் கொடுத்து கணையாழி போட்டிக்குச் சேர்த்துவிடும்படி சொன்னான். 

ஆபீஸ் - அத்தியாயம் 12 ரெட் லைட்

சுர்ரென்று ஏறிற்று. 

நீங்கள் ஏசி, இவர்கள் சூப்பிரெண்டெண்ட்டுகள், என்பதைப் போல நான் எல்டிசி. இதில் எங்கிருந்து வந்தது ஆஃப்ட்டரால் என்று உரக்கச் சொன்னான். 

யாசக சாருவும் வாசக அடிமைகளும்

சாரு இந்த வீடியோவை 

18 February 2023

உலகச் சிறுகதைகள் 8 மாரியோ பெனதெத்தீ

துரும்பளவு முயற்சியுமின்றி, சும்மா பார்த்தால் போதும் என்கிற மாதிரியான எக்கச்சக்க அக்கப்போர்கள், இலவசமாகவேறு கிடைப்பதால், படிக்கிற பழக்கமே ஒரேயடியாய் போய்விடும்போல இருக்கிறது.