03 December 2017

தியாக தீபமே

நான் இவனுக்கு புக்கு போடாட்டா இந்த எழுத்தாளப் பயலையெல்லாம் யாருக்குத் தெரியும். நான்தான் இவனுக்கெல்லாம் அட்ரஸே குடுத்தேன்.

என் முதல் புக்கை நானே வெளியிட்ட 1983ல மெட்ராஸ் எங்க இருக்குனாவுது உங்களுக்குத் தெரியுமா மொதலாளி. இல்லே நீங்க கலை இலக்கிய சேவை செய்யிறதுக்காக பொட்டி நிறைய பணத்தோடதான் சென்னைக்கு வந்தீங்களா மொய்லாளி. 

இவனுக்கெல்லாம் புக்கு விக்குமா. நான்தான் பாவப்பட்டுப் போனாப் போவுதுனு இவனுக்கு புக்கு போட்டேன்

மொய்லாளி அமேஸான்காரன் எவ்ளோ புளுகுணிப் பயலா இருக்கான். இப்படி அப்பப்ப ராயல்டி கணக்கைக் குடுத்து, எழுத்தாளப்பயலுவளுக்கு எப்படில்லாம் மயக்கத்தையும் மாய பிம்பத்தையும் உருவாக்கறான் பாருங்க. இத்தினிக்கு என் புக்கு எல்லா இடத்துலையும் இன்னும் அப்படியே ஃபிரீயாதான் கிடைக்கிது பாத்துக்கிடுங்க. பெரிய மொய்லாளிக்கு எதிரா இப்படிலாம் பேசறேனேன்னு சமூகம் தப்பா எடுத்துக்கப்பிடாது. 

இன்னோரு விஷயம் விட்டுப்போச்சு மொய்லாளி. இது வெறும் புக்கை டவுன்லொட் பண்ணினதுக்கான ராயல்டி துட்டு மட்டும்தான். பேஜ் ரீடுக்குத் தனியா தரேங்கறான் படுக்காளிப்பய. 


அவன் கெடக்கறான். புது எழுத்தாளக் கொத்தடிமைகளை உருவாக்க, தேவ புத்திரனா தியாக தீபமா நீங்க நெத்தி வேர்வையை நெலத்துல சிந்த ஆரம்பிங்க மொய்லாளி. மாமல்லன் மாதிரி கெட்டபயபுள்ள, எந்தப் பத்திரிகையுமே போடாத, அவனோட தவிப்புங்கிற  கதையைத் தலைப்பா வெச்சி வெளிடப்போற புது பொஸ்தவத்த, மொதல்ல அமேஸான்ல வெளியிட்டுட்டு, அப்பால அச்சு பொஸ்தவமா வெளியிடப்போறான்னு கேள்விப்பட்டேன். அவங்கெடக்கான் யூ கேரியான் மொய்லாளி. ஆல் தி பெஸ்ட் 

சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் 

விமலாதித்த மாமல்லன் கதைகள்
https://www.amazon.in/dp/B076YSVK6S 

சோழிகள் 

உயிர்த்தெழுதல் 

முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் 

அறியாத முகங்கள்