12 December 2017

ரமேஷ் பிரேதனுக்கு நிதியுதவி

ரமேஷ் பிரேதனின் SBI A/cல் நேற்று காலையில் இருந்த இருப்பு வெறும் 12 ரூபாய். என்ன செய்வது என்று விழி பிதுங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். 


நான்கு நாட்களுக்குமுன் ஒரு பதிப்பாளருக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் பணம் கேட்டு அவர் அனுப்பியிருந்த இரண்டு SMSகளுக்குப் பத்திரிகை ஆசிரியரிடமிருந்து மட்டும் நேற்றுப் பகல் வாக்கில் வந்திருந்த பணம் 3000 ரூபாய். அதை எடுத்து உதவி செய்பவர்களுக்கு சம்பளமாகக் கொடுத்துவிட்டார்.

நேற்று இரவிலிருந்து நீங்கள் அனுப்பத்தொடங்கி இதுவரை சேர்ந்திருப்பது 22,500/- இது சில மாதங்களுக்கு அவரது உணவு மற்றும் உதவியாளர் செலவை ஈடுகட்டிவிடும். 

பிஸியோதெரப்பி பயிற்சியின்றி அவரது ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவே இயலாது என்பதே எதார்த்தம்.

பிஸியோதெரப்பி, குறைந்தது ஆறு மாதங்களுக்கேனும் அளிக்கப்படவில்லையென்றால், உடல் ஆரோக்கியத்தில் எந்த முன்னேற்றத்தையும் காணவியலாது. இதற்கு ஆகக் குறைந்தபட்சமாகப் பார்த்தாலும் மாதம் 15 ஆயிரம் தேவைப்படும். 

இதற்கு, 5000/- வீதம் உதவ மாதம் மூன்றுபேர் வீதம் மொத்தம் 18 பேர் தேவை. சேருகிற பனத்தை பிஸியோதெரப்பிக்காக மட்டுமே செலவிட ஃபிக்ஸட் டெப்பாஸிட்டில் போட்டுவைத்துக் கொள்வதே நல்லது. 

வலது கையையும் காலையும் அசைக்க முடியவில்லை என்பதைத் தவிர, மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட அவரது பிளட் ரிப்போர்ட் நார்மலாகவே இருப்பதாக, அவரை நேரில் சென்று பார்த்த டாக்டர் நண்பர் கூறியிருக்கிறார். மருந்து மாத்திரைத் தேவைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பிஸியோதெரப்பிக்கும் தம்மாலான அளவுக்குக் குறைந்த செலவில் அமைத்துக்கொடுக்க முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை. ஆகவே மாதம் 15,000 இல்லாமல், தரமான பிஸியோதெரப்பி சாத்தியமில்லை என்பது திட்டவட்டமாகத் தெளிவாகிவிட்டது.

5,000/- அளவுக்குக் கொடுக்க ஈயலாதவர்கள் சிரமப்பட வேண்டாம். இயன்றதை அளிக்கலாம். அது மாதாந்திர செலவுக்குப் பயன்படும்.

ஒரு லட்சமாகப் பார்த்தால் யாருக்கும் மலைப்பாகத்தான் இருக்கும். 5000த்தை ஒருமுறை அளிப்பது, தமக்குப் பெரிய சுமையாக இருக்காது, உடனே தம்மால் உதவ முடியும் என நினைப்பவர்கள் தாங்களே நேரடியாக ரமேஷ் பிரேதனின் வங்கிக் கணக்கிற்கு உடனடியாக பணத்தை அனுப்பிவிடலாம். உடனடியாக முடியாது ஆனால் தங்களால் இன்னும் சில காலம் கழித்து உதவ முடியும் என எண்ணுபவர்கள், என்னை மெசஞ்சரிலோ வாட்ஸப்பிலோ தொடர்புகொண்டால் திட்டமிட வசதியாக இருக்கும். 

ரமேஷ் பிரேதனை இப்படியே, உடல்நலம் குன்றிய நிலையிலேயே வைத்துக்கொண்டிருப்பது எவருக்கும் உவப்பான விஷயமில்லை. அவர் பழையபடி இயங்கவேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும் ஆகும். அதற்குக் கணிசமான நிதி தேவை. அதைக் கொடுத்து உதவ முன்வருவோர் அவருக்கே நேரடியாக பணம் அனுப்பிவிடுங்கள். மிக்க நன்றி.