22 December 2017

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 1

ரமேஷ் பிரேதன் இரண்டு நாட்களாக டெஸ்க்டாப் மற்றும் ஜியோ நெட் உதவியில் இணையத்தில் இருக்கிறார். நிறைய படிக்கத் தொடங்கியிருக்கிறார். 

பிஸியோதெரப்பி நிபுணர் வந்து பார்த்துவிட்டு, முதலில் வாக்கர் உதவியுடன் நடந்து, வீட்டிலிருக்கும் நிலை சைக்கிளில் பயிற்சி செய்து ஒரு மாதகாலம் உடலை இலகுவாக்கிக்கொள்ளும்படி அறிவுருத்தியிக்கிறார். பிறகு தம் வேலையைத் தொடங்கினால்தான் பலன் கிடைக்கும் என்று  கூறியிருக்கிறார். 

அதற்கு, முதலில் பிறர் உதவியின்றி சைக்கிளில் ஏறி உட்காரவும் இறங்கவும் முடிகிற அளவுக்கு அவரது உடல் எடையைக் குறைத்தாகவேண்டும். 

இதற்கு எனக்குத் தெரிந்த ஆரோக்கியமான ஒரே வழி பேலியோதான். பாதாம் வெண்ணெய் முட்டை பச்சைக் காய்கறிகள் பாதாம் பிசின் பால் என்று கிட்டத்தட்ட கீட்டோஸ் உணவுவைத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு இது பிடிக்கவும் செய்கிறது என்பது மகிழ்ச்சிகரமான விஷயம். 

அடிப்படையில் வாழ்வோ மனிதர்களோ எவ்வகைச் சிக்கலைக் கொடுத்தாலும் அலறிப் புலம்பாமல், சமரசம் செய்துகொள்ளாமல் வைராக்கியத்துடன் எதிர்கொள்பவனே போராளி.  

எனவே தம் கனவான ஏழு நாவல்களில் இரண்டாவதையோ மூன்றாவதையோ இன்னும் ஆறு மாதம் ஒருவருடத்தில் புதுச்சேரி பூங்காவில் உட்கார்ந்து ரமேஷ் பிரேதன் எழுதிக்கொண்டு இருப்பதை யாராவது போட்டோ பிடித்து பேஸ்புக்கில் போட்டாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்👍 

பிகு: பிஸியோதெரபிக்கு மாதாந்திர நிதியுதவி செய்ய முன்வந்தோர் அது தொடங்கும்வரை சற்றே பொறுத்தருளவும். அவர்களது விசாலமான உள்ளங்களுக்கு மிக்க நன்றி🙏