21 December 2013

ஆசான்!

தலித் மக்களின் அழிவு பற்றி நாவல் எழுதிவிட்டதாக புரொமோட் செய்துகொள்கிறாயே, நவம்பர் 2012ல் தர்மபுரி கலவரம் நடந்தபோது மூடிக்கொண்டுதானே இருந்தாய் என்று கேட்டால்,

கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல், இதோ பார் தர்மபுரி கலவரம்பற்றி எழுதி இருக்கிறேன் என்று, ஜூலை 2013ல் இளவரசன் மரணத்திற்கு எழுதிய அஞ்சலி கட்டுரையைக் காட்டுகிறார் ஜெயமோகன்.

இதெல்லாம் எழுத்தாளன்களின் ரத்தத்தில் இருப்பதுதானே, இதிலென்ன பெரிய அயோக்கியத்தனம் என்கிறீர்களா?

இளவரசன் என்பது கட்டுரையின் பெயர் ஆனால் அதற்காக ’இப்போது’ கொடுக்கப்பட்டிருக்கும் சுட்டியின் தலைப்பைக் கூர்ந்து பாருங்கள்.


ஆதாரம்:



தர்புமபுரி, கலவரம் கட்டுரை இந்த சுட்டியை அழுத்துங்கள். இது உங்களை எங்கே அழைத்துச் செல்கிறது 


இளவரசன் http://www.jeyamohan.in/?p=37573

ஆதாரம்:


இது ஜெயமோகன் செய்யும் முதல் அயோக்கியத்தனமன்று. ஏற்கெனவே அறம் கதைக்காக எம்.வி.வெங்கட்ராம் பற்றி திகிடுதித்தம் செய்து மாட்டிக்கொண்டது வரலாறு.

யாரோ ’மடக்கிவிட்டார்கள்’என்பதற்காக ’இளவரசன்’ என்று எழுதிய கட்டுரைக்கு சுட்டியில் மட்டும் ’தர்மபுரி கலவரம், கட்டுரை’ என்று பெயர் வைத்து பம்மாத்து பண்ணிக்கொள்ளும் அளவுக்குதான் இவரது தலித் அக்கறை. 

<என் மகனின் வயதுதான் இளவரசனுக்கு. ஒரு தந்தையின் நெஞ்சில் ஊறும் கண்ண்ணீருடன் அவனுக்கு அஞ்சலி.>

இதுபோல் மாய்மாலம் செய்ய ஜெயமோகன் போன்ற கேவலமான சந்தர்ப்பவாதிகளால் மட்டும்தான் முடியும்.

கொஞ்சமாவது சூடு சுரணை உள்ளவன் இதையெல்லாம்போய் ஆசான் என்று சொல்லிக்கொள்வானாடே!