27 September 2011

உயிர்

எப்போதும் உனக்கு சொல்லிக்கொள்

எளிய சொற்களில் கடின விஷயமா
கடின மொழிக் கற்றைகளில் எளியதா
என்பதில் ஒருபோதும் மயிரை இழக்காதே
எஞ்சி இருப்பதே கொஞ்சம் எனும்போது
சிக்கனம் அவசியம்

26 September 2011

மூடுதிரை

வெயில் வந்ததே என்று ஜன்னலை மூடினேன்
காற்றும் வராமல் போனது.

நிலவு பார்க்க திறந்து வைத்தேன்
கொசுக்களும் வந்தன.

மனத்தைத் திறந்து மூடுவதுபோல்
அவ்வளவு எளிதில்லை
ஜன்னலைத் திறப்பதும் மூடுவதும்.

22 September 2011

மோட்சம்

சுற்றுச்சூழலின் விழிப்புணர்வோ 
கிணறு குளம் கடல் கிட்ட இல்லாத சங்கடமோ 
பால்கனி பக்கெட்டில் கரைந்துகொண்டிருந்த
களிமண் பரம்பொருள்
தொட்டிச்செடியை பெலப்படுத்தக்கூடும்

21 September 2011

குடை

அச்சுவெல்லமாய்
வார்க்கப்பட்ட பிள்ளையார்
சுபிட்சம் அளிக்க
நாற்பது ரூபாய்க்கு வீடு வந்தார்.
கொசுறாய் வந்தது
குண்டிப்புறம்
குடையைப் பிடித்துக்கொள்ளக்
கொஞ்சம்போல களிமண்.


மன்சூர் அலியும் மண்ணாந்தையும் - சுடச்சுட ஃபேஸ்புக் சாட்டிலிருந்து

Manzoor Ali
Today

vanakkam sir

வணக்கம்

வெசாவும் பிரமிளும் திமிர் பிடித்த சண்டைக்காரர்களா?

06 JulyRamji Yaho

ஆனாலும், உங்களின் வாசிப்பு ஆர்வம், முயற்சிகள் பிரமிக்க வைப்பவை சார். இன்னொரு மனிதரால் இந்தச் சாதனையை முறியடிக்க முடியுமா என்பது ஐயம்.

சோடாபாட்டில் - அது போதும்



Bala Jeyaraman to me
show details 9:09 PM (12 hours ago)

மாமல்லன் சார்,

ஆஹ்.. நா ஆளானத் தாஆஅமர ரொம்ப நாளாகத் தூஊஉங்கல


தொலைக்காட்சி பார்ப்பதில்லை. 
இணையம் வெட்டி அரட்டை மடம். 

20 September 2011

இடுக்கும் எழுத்தும்


இடுக்கில் எழுது
கிடைத்த இடுக்கில் எழுது
கிடைத்த இடுக்கைப் பற்றி எழுது
கிடைக்காத இடுக்கைப் பற்றியும் எழுது
இடுக்கில் எழுத நேர்ந்ததே என்கிற புலம்பலையும் எழுது
முக்கியமான விஷயம் இடுக்கா எழுத்தா?
இரண்டும்தான்
சீசருக்கு உரியது சீசருக்கு
ஆண்டவருக்குரியது ஆண்டவருக்கு

19 September 2011

மழைநாளின் ரயில் பயணம்

மந்தநடை பயிலும்
புறநகர் கர்ப்பிணி மாடாய்
அசுவாரஸியத்துடன்
விட்டுவிட்டுப் போய்க்கொண்டே
கூடக்கூட வந்துகொண்டிருந்த
மழை,
அதக்கிய புகையிலையாய்
சுவரொடுக்கி
அடுத்தவன் அக்குளை
உரசியபடி
எழுதவைத்துக்கொண்டிருந்தது.

அது சரி,
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
சம்சயமென்ன?
பிரமிளுக்கும் பெருமாளுக்குமான
சம்பந்தம்தான்.

இலக்கியம், கெளரவ ஜெபமாலை உருட்டலில்லை.

சண்டை நம் ஈகோவுக்காக இல்லாமல் நமக்கு சரியெனப்படும் இலக்கிய தரப்பிற்கானது எனில் கட்டாயம் இலக்கியத்தரமாக அமைந்தே தீரும் # ’தரம்’ என்பது உயர்தர ஜெபமாலை உருட்டலில்லை.

18 September 2011

ஊழலுக்கெதிரான தீவிர தேசப்பணி

வங்கிக் கடன்கூட முதல் வீட்டிற்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. காரணம்,முதல் வீடு எல்லோருக்கும் அடிப்படை அவசியம். இரண்டாவது வீடு என்பது சொகுசு. 

ஜெயமோகனின் டிவிஎஸ் கீபோர்டு

நான் ஒருவன் மட்டுமே இலக்கியப் பிரவாகம் என்று விஷ்ணுவே தீர்மானித்துவிட்ட பிறகு மற்றவரெல்லாம் ஓரமாய் ஒழுகிச்செல்லும் சாக்கடைகள்தானே. 

தாயகம் பற்றி அலெக்ஸாண்டர் ஸால்ஜெனிட்சின்

எறும்புகளும் நெருப்பும்

அது எறும்புகளின் குடியிருப்பாய் இருப்பதை அறியாமல் ஒரு உளுத்துப்போன கட்டையை நெருப்பில் எரிந்தேன். கட்டை பிளக்கத்தொடங்கியதும், எறும்புகள் வெளிப்பட்டுத் திகைத்து நான்கு திசைகளிலும் ஓடின. கட்டையின் மேற்புரத்தில் ஓடின-ஜ்வாலையில் தீய்ந்தும் செத்தும். நான் கட்டையை இறுக்கிப்பிடித்து மறுபுறத்தைத் திருப்பினேன். மணலுக்கும் பைன் மரக்குச்சிகளுக்கும் ஓடின.

முடிச்சு - கடிதம்


R.V. Subramanyan to me
show details 9:31 PM (8 hours ago)
Dear Mamallan, From a confirmed poetry-hater who is struggling with a mudicchu for the last couple of years; I could absolutely identify with this. You have captured my feelings perfectly...Cheers RV
siliconshelf.wordpress.com

***

நன்றி.

17 September 2011

நொம்பலம்

எழுதியதோடு நம் வேலை முடிந்தது என்று முறுக்கித் தோளில் போட்டுக்கொண்டு போய்விட முடிகிறதா?
 
அதை எப்படி வாசிக்கவேண்டும், எதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும், என்ன சொல்ல வருகிறது என்று பொழிப்புரை நல்கி, இப்போது புரிகிறதா என்று வகுப்பெடுத்து, எழுதியவனே கையையும் தட்டிக்கொள்ளவேண்டும். 

ங்கோத்தா! 
புழுதிக்காத்துலப் பொரிகடலை விக்கப்போனவன் கதையாயிடுச்சே இணையத்துல எழுத வந்தது.

முடிச்சு

முடிச்சிலிருந்து விடுபடவேண்டும்.
முடிந்தால் இந்த முடிச்சை அவிழ்க்க உதவுங்கள்.
முடிச்சு, ஏன் முதலில் விழுந்தது என்றோ
அல்லது ஏன் போட்டுக்கொண்டாய் என்றோ
காலாட்டியபடி வக்கணை பேசாதீர்கள்.

16 September 2011

எழுத்தால் என்ன செய்துவிட முடியும்?

நேற்றிரவு அலைபேசியில் சகா ஒருவனின் அழைப்பு.

சொல்லுமா.

மச்சி நாளைக்கி எக்ஸ்போர்ட் குடுக்கப்போறேன்.

15 September 2011

அமல் படுத்தல்

சம்பளத்தை நேரடியாக வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளும் செளகரியத்தை சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு அமல்படுத்திற்று. ஆரம்பத்தில் பரிசோதனை முன்னோட்ட முயற்சியாய் 2001-2002ல் ஒரு சுற்றறிக்கை மட்டும் வந்தது. திருச்சியில் அப்போதிருந்த துடியான கூடுதல் உயர்அதிகாரி ஒருவரின் தனிப்பட்டமுயற்சியால் தனியார் வங்கியில் பேசி இது அமலுக்கு வந்து விட்டது வேறு விஷயம். 

குல்லாவுக்கு உள்ளே இருப்பது என்ன?

 Chenthil 

@ 
 I shudder to think of Vinavu/Roza/Maamallan/Ravisrinivas deconstructing what is essentially modern thiruvilayadal.

யார் இவர்? நம்மை ஏன் இவர் வம்புக்கு இழுத்தார்? இது எதற்கானது என்று அவரது ட்விட்டுகளில் தேடப்போய் அது கிடைக்கவில்லை எனினும் இந்த பொக்கிஷம் கிடைத்தது.

14 September 2011

அம்பாரப் பண்டாரமும் மோட்டார் மெக்கானிசமும்


<கவிதை எழுதிப் பார்க்காமல் கவிதையை ரசிக்கும் மட்டும் மனநிலை நிறைய பேருக்கு ஏற்படுவதில்லை.>

கவிதை எழுதிப் பார்க்காமல் கவிதையை, ரசிக்கும் மனநிலை மட்டும் நிறைய பேருக்கு ஏற்படுவதில்லை.

கவிதை எழுதிப் பார்க்காமல் கவிதையை, ரசிக்க மட்டுமேயான மனநிலை நிறைய பேருக்கு ஏற்படுவதில்லை.

சொல்வது யாவர்க்கும் எளிது. துல்லியமாய்ச் சொல்ல முயற்சிப்போர் அரிது.

கடிச்சு மெல்லதானப் பல்லு அதைத் துலக்கும் நேரத்தில் இன்னொண்ணைக் கடிச்சுத் துப்பலாமே என்பது அம்பாரப் பண்டாரத்தாரின் அவதானிப்பு.

வரிசையாவும் இருந்து மெல்லுவது தெரியாமலும் இருந்தால் நன்றாகவும் இருக்குமே என்பது மோட்டார் மெக்கானிசம்.

வழுக்கி வாழும் கணங்கள்

எதிரில் நின்று எல்லா பெண்டிரும் ஏனிப்படி லஜ்ஜையற்று வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள் என்று, புறநகர் ரயில் நிலையத்தில் காத்திருக்கையில் தோன்றுவதும், அனைவரும் ஒத்திசைவோடு குழுநடனம்போல் நடைமேடையின் ஓரம் நோக்கி நகர்கையில், நமக்குப் பின்னால் தொலைதூர வளைவில் வண்டி வந்துகொண்டிருந்தது பிடிபடுவதும் ஆணியல்பு. 

பிடிபட்டது பதியாமல் கலைந்துவிடுவதன் காரணம், புதிதாக சிலர் முளைத்துக் மனதைக் கலைக்கத் தொடங்கிவிடுவதுதான்.

பி.கு: எவரும், விருப்பப்படி எண்டர் தட்டிக் கொள்ளலாம். வடிவம் காப்புரிமை செய்யப்படவில்லை.

12 September 2011

முழுமை

செப்பனிட்டேன் முழுமை வேண்டி.
கிடைக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில்
பின்னத்தைச் செதுக்கத் தொடங்கினேன்.
பூரணம் கூடுவதுபோல் தோன்றிற்று.

இயற்கையில் எப்படித் தன்னால் கூடி நிற்கிறது?
இலையில் பூவில் செடியில் கிளையில் நிலவில் கடலில்
மூலத்தின் முளையில் எப்படி நிறைந்தது முழுமை?

காற்றின் முழுமை,
மரமொடிக்கும் மூர்க்கத்திலா?
இலையசைக்கும் வருடலிலா?

ஒப்பீட்டில் உயிர்தரிக்கும் உயர்வு போல்
தொலைவில் தெரிந்த முழுமை,
தொலைவில் இருந்தது.

09 September 2011

வளர்

பூமியின் தோற்றுவாயாய்த் தோன்றிய எரிமலைக் குழம்பு 
உருகிக் குளிர்ந்த பாறையில், 
எங்கோ எப்போதோ இறந்தவர்களுக்கு, 
நடுகற்களை உருவாக்கி ஏற்றுமதி செய்ய, 
ராப்பகலாய் செத்துக்கொண்டிருக்கும் 
தொழிலாளிகளின் உழைப்பை முதலீடாக்கிக் 
கூலியைப் பிந்திப்பிந்தித்தந்து 
வாழ்ந்து கொண்டிருப்பவர் 
கொண்டுவரப்போகும் அந்நியச் செலாவணிக்காகக் 
கதவை சீல் வைக்கக் 
கண்விழித்தாகவேண்டிய வேலைக்கு இடையில் 
முடிந்தால் இலக்கியம் வளர். 

06 September 2011

எதிரிகளை சுலபமாய் சம்பாதிப்பது எப்படி?

சீக்கிரம் பணக்காரர் ஆவது எப்படி?
சினிமா இயக்குநர் ஆவது எப்படி?
காதலியைக் கவர்வது எப்படி?
அடுத்தவரை எளிதாய் வெல்வது எப்படி?

03 September 2011

கோலி சோடாவும் காலி சோடாக்களும்

ஊழல் செய்யும் உயர் அதிகாரிகள்மேல் வழக்குத்தொடுக்க வேண்டுமென்றால் துறையிலிருந்து அனுமதி வாங்க வேண்டும் - பஸ்ஸில் உதிர்க்கப்பட்ட முத்து.

அதாவது இப்போது இருக்கும் சட்டங்கள் எல்லாம் ஊழலுக்கு சாதகமாகவே உள்ளன. ஊழல் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய இயலாது. ஆகவே ஹசாரேவின் ஜன்லோக்பால் ஒன்றே தீர்வு.

புகார் மனு போன்றதொரு விண்ணப்பம் [சிறுகதை]

ஐயன்மீர்,

பொருள்: 1986ல் சத்ரபதி வெளியீடாய் பதிப்பிக்கப்பட்டு, இன்று அச்சில் இல்லாது அருகிப்போன, முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் என்கிற புத்தகத்தின், (கையில் இருந்த மிகச்சிலப்) பிரதிகளில் ஒன்றை, சுமார் 9 மாதங்களுக்கு முன்னால், படித்துவிட்டுத் தருகிறேன் என்று கொடுத்த வாக்கை நம்பிக் கொடுத்த, அரசு அதிகாரி, தற்போது புத்தகத்தைத் திருப்பிக் கேட்டால், இடையில் நடந்த அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் உண்ணாவிரதப் போராட்ட வரலாற்றுத் தருணத்திற்குப் பின், ஏதேதோ காரணங்களைக் கூறி டபாய்க்கும் ஒரு ஜன் பற்றிய புகார் மனு போன்ற விண்ணப்பம்.

01 September 2011

தட்டிக் கேளுங்கள் ஊழல் ஒழியக்கூடும் குல்லாபோட்டு ஒழியாது

ஒரு சம்பவம் (என்று நானல்ல சொன்னது நண்பர்)

2005. என் தங்கைக்கு அண்ணா பல்கலையில் இடம் கிடைத்திருந்தது. கல்விக்காக லோன் பெறும் முயற்சியில் இருந்தேன். அப்போது நிதி அமைச்சர் சிதம்பரம் அனைத்து வங்கிகளுக்கும் கல்விக்காக லோன் கேட்டு விண்ணப்பிபவர்களுக்கு கட்டாயம் லோன் வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாக பேப்பரில் செய்திகள் வந்தன. சரி அண்ணா பல்கலை க்கழகம் என்பதால் லோன் ஈசியாகக் கிடைக்கும் என்று நினைத்து இந்தியன் வங்கி மதுரையில் அப்ளை செய்தோம்.

வாழும் கணங்களும் - நீலத்திமிங்கலங்களும் - வயிறுவலிக்க சிரிக்கவேண்டுமா!


<நம் காலத்தில் வாழும் மகத்துவமான கவிஞர் தூத்துக்குடியில், கடலுள்ள ஊரில்தான் வசிக்கிறார்.> 

எம்.டி.எம் - ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழிக் கதை

ஒருபத்தி கதையா? ஒரு பத்தி கதையா? ஒருவரைப் பத்திய கதையா? இல்லை சும்மா ஒரு பத்திக் கதையா?